விமானப்படை தளபதி கிண்ண கோல்ப் போட்டிகளுக்கான ஊடகசந்திப்பு
5:55pm on Sunday 28th January 2024
2024- ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதி கிண்ண கோல்ப் போட்டிகளுக்கான செய்தியாளர் சந்திப்பு கடந்த 2024 ஜனவரி 08ம் திகதி அன்று புதிய விமானப்படை தலைமையகம், பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் டயலொக் எண்டர்பிரைசஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.நவீன் பீரிஸ் ஆகியோரால் விமானப்படை தளபதி கோல்ஃப் கிண்ணம் காட்சிப்படுத்தப்பட்டது நிகழ்வின் சிறப்பம்சமாக இருந்தது.விமானப்படை விளையாட்டு கவுன்சிலின் செயலாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே தலைமையில் விமானப்படை விளையாட்டு நாட்காட்டியில் நடைபெறவுள்ள விளையாட்டு நிகழ்வுகள் பற்றிய விளக்கமும் இந்த நிகழ்வில் இடம்பெற்றது.
சீனக்குடா ஈகிள் கோல்ப் லிங்க் மைதானத்தில் இந்த போட்டிகள் 2024 ஜனவரி 19 முதல் 21ம் திகதிவரை 11வது முறையாக இடம்பெறவுள்ளது மேலும் 04வது முறையாக டயலொக் எண்டர்பிரைசஸ் குழுமம் இந்த அனுசரணையை வழங்கிவருகிறது இதன்போது விமானப்படை தளபதியிடம் டயலொக் எண்டர்பிரைசஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.நவீன் பீரிஸ் அவர்களினால் காசோலை வழங்கிவைக்கப்பட்டது
இந்த ஊடக சந்திப்பில் தளபதி கிண்ண கோல்ஃப் போட்டியின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்க மற்றும் விமானப்படை கோல்ப் சம்மேளனத்தின் தலைவர் எயார் கொமடோர் அசேல ஜயசேகர விமானப்படை ஊடக பணிப்பாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.