இலங்கை கடற்படை தலைமை தளபதி மற்றும் விமானப்படை தளபதி ஆகியோருக்கு இடையில் பிரியாவிடை சந்திப்பு
5:57pm on Sunday 28th January 2024
இலங்கை கடற்படையின் தலைமை தளபதி ரியர் அட்மிரல் கே.ஜே.குலரத்ன, இலங்கை கடற்படையில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக 2024 ஜனவரி 09 ஆம் திகதி விமானப்படை தலைமையகத்தில் எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.
இருதரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்னர், நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு சின்னக்களை பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன், கடற்படையின் தலைமை தளபதியினால் தேசத்துக்காக ஆற்றப்பட்ட சிறந்த பணியை விமானப்படை தளபதி பாராட்டியதுடன், அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்தினார்.