11 வது விமானப்படை தளபதி கோல்ப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவது பெற்றது
12:16am on Tuesday 13th February 2024
இலங்கை விமானப்படை மற்றும் ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ் இணைந்து   11வது  தடவையாக  நடாத்திய விமானப்படை தளபதி  கிண்ண கோல்ஃப் போட்டிகள் கடந்த 2024 ஜனவரி 20ம் திகதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்பில்  திருகோணமலை சீனக்குடா ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ்  மைதானத்தில் டயலொக்  எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பிரதான  அனுசரணையில் இடம்பெற்றது.

விமானப்படை தளபதி  கிண்ண கோல்ஃப் போட்டி தொடரில் ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். மேலும் சிறந்த முப்படை சேவையாளர்களுக்கான  சவால் கிண்ணப்போட்டியில் முப்படை வீர வீராங்கனைகளும் போட்டியிடுகின்றனர்.
 
இந்த தொடரில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ  மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர்  உற்பட  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு  வீர வீராங்கனைகள் 100ம் மேற்பட்டவர்கள்  பங்குபற்றினர்.

 2024ம் ஆண்டுக்கான  ஆடவர் பிரிவின் விமானப்படை தளபதி கிண்ணத்தை எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்க அவர்கள் வெற்றிபெற்றதுடன் மகளிர் பிரிவில்  திருமதி.அனூஷா சேனாதீர அவர்கள் பெற்றுக்கொண்டார் மேலும் முப்படை சேவையாளர்களுக்கான  சவால் கிண்ணத்தை விமானப்படையின் விங் கமாண்டர் அசந்த குணரத்ன அவர்கள் பெற்றுக்கொண்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை