ஐக்கிய அமெரிக்க விமானப்படை கல்லூரியின் பிரதிநிதிகள் விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர்
ஐக்கிய அமெரிக்க வான் யுத்த கல்லூரியின் பிரதிநிதிகள் மார்ச் 05, 2024 அன்று விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர். கேர்ணல் ஆடம் வில்லியம் ஹில்பெர்க் தலைமையிலான குழுவினர், தற்போது இலங்கையில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ள 13 ஆயுதப்படை அதிகாரிகள் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.
அவர்களின் விஜயத்தின் போது, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறியின் பணிப்பாளர் குரூப் கப்டன் டிரோன் முனசிங்க, இலங்கை விமானப்படை மற்றும் தேசிய பாதுகாப்பின் பரந்த அம்சங்கள் குறித்து நுண்ணறிவுமிக்க விளக்கமொன்றை வழங்கினார். இந்நிகழ்வில் பொறியியல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ஜிஹான் செனவிரத்ன மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
சுவாரசியமான விளக்கக்காட்சியைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.






























