வவுனியா விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 02 வான் பாதுகாப்பு ராடார் படையணி 18வது ஆண்டு விழாவை கொண்டாடியது.
10:22pm on Friday 10th May 2024
வவுனியா விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  இல 02 வான் பாதுகாப்பு ராடார் படை தனது 18வது ஆண்டு விழாவை 2024 மார்ச் 10 அன்று கொண்டாடியது. 2006 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி  MK II ரேடார் அமைப்புடன் இந்த படைப்பிரிவு ஆரம்பத்தில் நிறுவப்பட்டது. கட்டளை அதிகாரி விங் கமாண்டர் ஆர்.எம்.எஸ்.என்.ரணசிங்க அவர்களினால்  அணிவகுப்பு  பரீட்சணையின் பின்னர்  ஆசீர்வாதத்திற்கான சமய வழிபாடுகளின் பின்னர் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

இந்த தினத்தை  முன்னிட்டு  2024 மார்ச் 11ம் திகதி மஹாகோங்கஸ்கட ஆரம்பப் பள்ளியின் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் தொண்டு இயக்கம் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, அன்றைய தினம் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன், எழுதுபொருள்களும் வழங்கப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை