விமானப்படை சேவை வனிதா பிரிவு வரிய மாணவர்களுக்காக சிறப்பு நன்கொடை திட்டத்தை நடத்துகிறது
10:49pm on Friday 10th May 2024
பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர மகா வித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி விசேட நன்கொடை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி. இனோகா ராஜபக்ஷ கலந்து கொண்டார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலை பொலன்னறுவை மாவட்டத்தின் கிராமப் பகுதியில் அமைந்துள்ளது.
விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் பேரில் விமானப்படை சேவை வனிதா பிரிவு இந்த நன்கொடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததுடன், இதன் மூலம் பாடசாலையின் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு 33 ஜோடி காலணிகள் வழங்கி வைக்கப்பட்டன. நலம் விரும்பி ஒருவரின் ஆசியுடன் "சுவாசம் " திட்டத்தின் மூலம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சேவா வனிதா பிரிவு உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.