இலங்கை விமானப்படை மற்றும் ஆர்தர் சி கிளார்க் நிறுவனம் ஆகியன நவீன , விண்வெளி தொழில்நுட்பம் மற்றும்
6:00pm on Thursday 23rd May 2024
இலங்கை விமானப்படை மற்றும் ஆர்தர் சி கிளார்க் நிறுவனம் ஆகியன நவீன , விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ட்ரோன் திறன்களில் முன்னேற்றத்திற்கான உத்திசார் கூட்டுறவை உருவாக்குகிறது.
ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் தொலைநோக்கு நடவடிக்கையாக, தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு, பயிற்சிகள் , தரவுப் பகிர்வு, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) ஒத்துழைப்பு மற்றும் வளப் பகிர்வு ஆகியவற்றைப் பெறுவதற்கு நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி கிளார்க் நிறுவனத்துடன் (ACCIMT) கூட்டுறவை இலங்கை விமானப்படை தொடங்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் கடந்த 2024 மார்ச் 25ம் திகதி விமானப்படை தலைமையகத்தில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் பொறியாளர்.(டாக்டர்.) சனத் பனவென்னகே, ஆர்தர் சி கிளார்க் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வானது இலங்கையின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்திற்கு ஏற்ப விமானப்படையின் பங்கை சிறப்பாக செயல்படுத்துவதற்காக விண்வெளி தொழில்நுட்பம், ஆளில்லா விமானம் மற்றும் ஆளில்லா ஏரியல் வாகனங்கள் ஆகிய களங்களில் வேகமாக வளரும் பயன்பாடுகளின் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு ஒரு கூட்டுறவின் தொடக்கத்தைக் குறிக்கின்றது
இரு தரப்பினரிடமும் உள்ள தற்போதைய தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும் இந்த கூட்டு முயற்சியானது ஆளில்லா விமானம் மற்றும் ஆளில்லா ஏரியல் வாகனங்களின் களங்களில் கவனம் செலுத்தி, விமானப்படையை நிலைநிறுத்தி, விரைவாக வளரும் பயன்பாடுகளின் திறனை மூலோபாயரீதியாகப் பயன்படுத்துவதன் மூலம், தொழில்நுட்ப வல்லமையில் முன்னேற்றங்கள் மற்றும் இலங்கையின் பாதுகாப்புத் துறையில் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதுடன் .இந்த கூட்டுறவின் ஊடக , நாட்டில் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் முன்னணியில் இருப்பதற்கான இலங்கை விமானப்படையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், விண்வெளி தொழில்நுட்ப பயன்பாடுகள், ஆளில்லா ஏரியல் வாகனங்கள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் ஆகியவற்றில் அதிக நிபுணத்துவத்தை அடைவதற்கான ஒரு ஆரம்பமாகும்.