சேவா வனிதா பிரிவு சேவை பணியாளர்கள் மற்றும் அவர்களின் வாழக்கை துணையினருக்கான விவசாயம் சார்ந்த சுயதொழில் பயிற்சி திட்டத்தை நடத்துகிறது.
1:05am on Wednesday 29th May 2024
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவு, இலங்கை விமானப்படை கட்டுநாயக்க தள கட்டளை விவசாய பிரிவுடன் இணைந்து சேவையாளர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களுக்கு விவசாயம் மற்றும் பால் சார்ந்த சுயதொழில் வாய்ப்புகள் பற்றிய அறிவை வழங்கும் செயலமர்வை ஏற்பாடு செய்தது இலங்கை விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவர் திருமதி இனோகா ராஜபக்ஷ அவர்களின் கௌரவமான பங்கேற்புடன் இந்த நிகழ்ச்சி 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப்படை தள அஸ்த்ரா மண்டபத்தில் நடைபெற்றது. பங்கேற்பாளர்கள் தங்கள் குடும்பங்களுக்கு நிதியுதவியை மேம்படுத்த சுயதொழில் வாய்ப்புகளை வழங்குவதே திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

இந்த செயலமர்வு 02 அமர்வுகளைக் கொண்டிருந்தது. தோட்டக்கலை, நாற்றங்கால் முகாமைத்துவம் மற்றும் அலங்கார உற்பத்தி தொடர்பான முதலாவது அமர்வு அதிகாரி விங் கமாண்டர் சரித் விஜேரத்னவினால் நடத்தப்பட்டது. இரண்டாவது அமர்வில் ஸ்குவாட்ரன் லீடர் பிரசன்ன ரூபசிங்க அவர்களால் நடத்தப்பட்ட பால் பொருட்கள் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சியை உள்ளடக்கியது. இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட சேவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை