2024 தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் இலங்கை விமானப்படை வீரர்கள் சாம்பியன்ஷிப் வெற்றியைப் பெற்றனர்.
10:16pm on Thursday 30th May 2024
2024 மே 20 முதல் 21 மே 2024 வரை கொழும்பு-07, விளையாட்டு அமைச்சு விளையாட்டு வளாக விடுதி உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியின் பின்னர் இலங்கை விமானப்படை தடகள வீரர்கள் 2024 தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளனர்.

ஒலிம்பிக் கமிட்டி செயலாளர், இலங்கை டேக்வாண்டோ சம்மேளனத்தின் தலைவர் சமிந்த புஞ்சிஹேவா, விமானப்படை டேக்வாண்டோ தலைவர் எயார் வைஸ் மார்ஷல் வி.டி.எஸ் ஸ்ரீமன்னா மற்றும் விமானப்படை டேக்வாண்டோ கூட்டமைப்பின் செயலாளர் குரூப் கேப்டன் எம்.டபிள்யூ.சி.எம்.வகிதா  இந்த போட்டியில் பிரதம அதிதிகளாக  அவர்கள் கலந்துகொண்டார்.

முப்படையினர், இலங்கை விசேட அதிரடிப்படை, தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள 16 டேக்வாண்டோ விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் மிகவும் போட்டித்தன்மையுடன் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இலங்கை விமானப்படை போட்டி முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று வெற்றியை நோக்கிச் சென்றதுடன், இலங்கை விமானப்படை டேக்வாண்டோ அணி போட்டியின் மறுக்கமுடியாத சம்பியனாக இருப்பதை உறுதிப்படுத்தியது.
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை