இலங்கை விமானப்படை கட்டுநாயக்கா தளத்தின் 49 ஆம் இலக்க இரசாயன, உயிரியல், அணு
இலங்கை விமானப்படை கட்டுநாயக்கா தளத்தின் 49 ஆம் இலக்க இரசாயன, உயிரியல், அணு, வெடிபொருட்கள் பிரிவின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலக வளாகம் மற்றும் விரிவுரை மண்டபம் திறப்பு விழா விமானப்படைத் தளபதியின் தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை விமானப்படை கட்டுநாயக்க தளம் இலக்கம் 49 இன் இரசாயன, உயிரியல், அணு, வெடிபொருட்கள் பிரிவுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலக வளாகம் மற்றும் விரிவுரை மண்டப கட்டிடம் 2024 மே 29 ஆம் திகதி விமானப்படைத் தலைவர் எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.


படைப்பிரிவின் கட்டளை அதிகாரி  குரூப் கப்டன் நிலேந்திர பெரேராவினால் விமானப்படைத் தளபதி வரவேற்கப்பட்டதுடன், விமானப்படை முகாமைத்துவ சபையினால் அங்குரார்ப்பணப் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.எண். 49  இரசாயன, உயிரியல், அணு, வெடிபொருள் பிரிவு 27 நவம்பர் 2019 அன்று நிறுவப்பட்டது.தற்போது பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நிலைகொண்டுள்ள இந்த பிரிவின் முதன்மை நோக்கம் அவசர இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிப்பு தாக்குதல் அல்லது சம்பவத்திற்கு தயார்படுத்துவது மற்றும் நோயாளிகளை வான் அல்லது தரை வழியாக பாதுகாப்பாக கொண்டு செல்லும் போது உடனடி சிகிச்சை அளிப்பதாகும்.

இந்த நிகழ்வில் விமானப்படை முகாமைத்துவ சபை, கட்டுநாயக்க விமானப்படை தள கட்டளை அதிகாரி, எயார் வைஸ் மார்ஷல் தேசப்பிரிய சில்வா மற்றும்பிற  அதிகாரிகள் மற்றும் ஏனைய வீரர்கள்  கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை