இலங்கை விமானப்படை புதிய சர்வதேச தரத்திலான கோல்ஃப் மைதானத்தை நிர்மாணிக்கவுள்ளது
11:57am on Wednesday 19th June 2024
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித பண்டாரதென்னகோன் பங்கேற்றார் அவர்களினால் , சர்வதேச தரத்துடன் சிகிரியா விமானப்படைத் தளத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய கோல்ஃப் மைதானமான 'ஈகிள்ஸ் சிட்டாடல் கோல்ஃப் மைதான' ஆரம்ப பணிகள்  உத்தியோகபூர்வமாக 13 ஜூன் 2024 அன்று  ஆரம்பித்துவைக்கப்பட்டது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் முக்கிய சுற்றுலா சொர்க்கமாக கருதப்படும் சிகிரியாவின் மையத்தில் நிர்மாணிக்கப்படும் இந்த கோல்ஃப் மைதானம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிகிரியா விமானப்படை தளத்தின் அழகிய சூழலில் மிக அழகாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோல்ஃப் மைதானத்தின் அழகு மற்றும் கோல்ஃப் வீரர்களுக்கு சவாலான போட்டியின் அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு, இந்த நோக்கத்திற்காக   (Island T)  மற்றும் (Island Bay)  போன்ற இடங்களும் இந்த புதிய கோல்ஃப் மைதானத்தில் கட்டப்பட உள்ளன.

இலங்கை விமானப்படைக்கு திருகோணமலை , அனுராதபுரம் மற்றும் கொக்கல விமானப்படை தளங்களில் மூன்று சர்வதேச மட்டீமி கோல்ஃப் மைதானங்கள் கட்டப்பட்டுள்ளன, மேலும் சிகிரி விமானப்படை தளத்தில் நிர்மாணிக்கப்படும் இந்த கோல்ஃப் மைதானம் விமானப்படைக்கு சொந்தமான நான்காவது கோல்ஃப் மைதானமாகும்.

இந்த புதிய கோல்ஃப் மைதானத்தில், கோல்ஃப் விளையாட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுவதோடு, கோல்ஃப் விளையாட்டிற்கு தேவையான விளையாட்டு உபகரணங்களும், அனைத்து வசதிகள், தங்குமிட வசதிகள், உணவு மற்றும் பானங்கள், நிலம் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை