கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள சிவில் பொறியியல் பிரிவு அதன் 21வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.
12:03am on Tuesday 2nd July 2024
கட்டுநாயக்க விமானப்படை  தளத்தில் அமைந்துள்ள  சிவில் பொறியியல்  பிரிவு தனது 21வது ஆண்டு விழாவை 2024 ஜூன் 13 அன்று பெருமையுடன் கொண்டாடியது. விமானப்படை தலைமையகத்தால் திட்டமிடப்பட்ட இலங்கை விமானப்படை மற்றும் பொதுத்துறையின் அனைத்து முக்கிய கட்டுமான மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த பிரிவு நிறுவப்பட்டது.

அதன் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சிவில் பொறியியல்பிரிவானது சீதுவை மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சமூக சேவை திட்டத்தை நடத்தியது மற்றும் 07 ஜூன் 2024 அன்று VTI வளாகத்தில் மதிய உணவு மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் சம்பிரதாய வேலை அணிவகுப்பின் போது, ​​விங் கமாண்டர் குரூப் கப்டன் என்.டி. ஏகநாயக்க அவர்கள் சிறந்த சேவைக்காக நான்கு வான்படை வீரர்களுக்கு பாராட்டுக் கடிதங்களை வழங்கினார், அதைத் தொடர்ந்து அனைத்து சேவை அதிகாரிகள் மற்றும் சிவில் ஊழியர்களின் பங்கேற்புடன் நட்புரீதியான விளையாட்டு போட்டியும் நடைபெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை