தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் விமானப்படை தளபதி ஆகியோர் மஹரகம அபெக்ஷ வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் நான்கு மாடி கட்டிடத்தொகுதியினை மேற்பார்வையிட்டனர்.
5:34pm on Monday 8th July 2024
ருஹுனு மஹா கதிர்காமம் தேவாலயத்தின் பிரதான அனுசரணையுடன் மற்றும் இலங்கை விமானப்படையின் முழு பங்களிப்புடன் மஹரகம அபெக்ஷ வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படும் சிறுவர் மருத்துவ பிரிவு நான்கு மாடி கட்டிட நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் கௌரவ. சாகல ரத்நாயக்க மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆகியோர் கடந்த 2024 ஜூன் 20ம் திகதி விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
மஹரகம அபெக்ஷ வைத்தியசாலையில் சிறுவர் மருத்துவ பிரிவிற்கான இடம் பற்றாக்குறை காரணமாக சிறுவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாவதால் ருஹுனு மகா கதிர்காம ஆலய பஸ்நாயக்க நிலேமி திஷான் குணசேகரவினால் இந்த புதிய நான்கு மாடி கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கடந்த 2023 செப்டம்பர் 21 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆரம்பத்தில் 03 மாடி கட்டிடமாக நிறமாணிக்க உத்தேசிக்கப்பட்டு இருந்த நிலையில் விமானப்படையின் கடின உழைப்பின் காரணமாக 04 மாடி கட்டிடமாக அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதோடு விமனப்படையினால் ற்போது நோய்வாய்ப்பட்டசிறார்களின் மன ஆரோக்கியத்திற்காக சிறுவர் பூங்கா ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.