விமானப்படை விளையாட்டுவர்ண இரவு.
9:32am on Tuesday 30th July 2024
விமானப்படை விளையாட்டு வீரர்களின் சாதனைகளை பாராட்டும் வகையில்    விமானப்படை விளையாட்டு கவுன்சிலினால்  ஏற்பாடு செய்திருந்த விமானப்படை விளையாட்டு  வர்ண இரவு  கடந்த 2024 ஜூலை 05 அன்று  இரத்மலானை விமானப்படை ஈகிள் லேக்சைட் விழா மண்டபத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன அவர்களின் பெங்கேற்பில் இடம்பெற்றது.

விமானப்படை விளையாட்டு வீரர்களின் சாதனைகள் மற்றும் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களின் அர்ப்பணிப்பையும் பாராட்டுவதற்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பமாக இந்த விமானப்படை  விளையாட்டு வர்ண இரவு அமைகின்றது . இந்த வர்ண இரவு நிகழ்வானது  முதல் முதலாக  1964 இல் ராயல் சிலோன் விமானப்படையால்  1962 மற்றும் 1963ம் ஆண்டுகளை    அடிப்படை ஆண்டுகளாக கொண்டு  இந்த நிகழ்வானது  நடத்தப்பட்டது.

இதன்போது சீனவராய விமானப்படை அகாடமியில் விமான விபத்தில் உயிரிழந்த ஃப்ளைட் லெப்டினன்ட் அப்பாப்பிள்ளை வரதராசாவை நினைவுகூரும் வகையில் இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்படுவதுடன், அதற்கு வரதராசா நினைவு கோப்பை என பெயரிடப்பட்டுள்ளது.  

இதன்படி, வரதராசா நினைவுக் கிண்ணத்தை வென்ற முதலாவது சிறந்த விமானப்படை வீராங்கனையாக பிளைட்  சார்ஜன்ட் பேர்ட்டி ஏகநாயக்க அவர்களும் மற்றும் விமானப்படை நிறங்களைப் பெற்ற முதல் விமானப்படை வீராங்கனையாக  துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிரேஷ்ட வான்படை வீராங்கனை  ஹதுன்சூரியா ஆகியோர்  விமானப்படையின் விளையாட்டு வரலாற்று நாட்குறிப்பில்  தங்கள் பெயர்களை நிலை நிறுத்திக்கொண்டனர்.

விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின்கீழ் இலங்கை விமானப்படை விளையாட்டு வர்ண   வரலாற்றில்     விளையாட்டு வீரவீராங்கனைகளை  ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை விமானப்படை வரலாற்றில் முதல் தடவையாக  2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் திறமைகளை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்களுக்கு  பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
 

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படும், விமானப்படை விளையாட்டு வண்ண இரவுவில்  37 விளையாட்டுகளை மதிப்பீடு  செய்வதுடன்  இம்முறை 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பங்குபற்றி திறமைகளை வெளிப்படுத்திய விமானப்படை வீரவீராங்கனைகள் 355 பேருக்கு 555 வர்ணங்கள்  பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதன்போது  2022 ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான ஃப்ளைட் லெப்டினன்ட் ஏ வர்தராசா நினைவுக் கோப்பையை   ஜூடோ  வீரர் சார்ஜன்  சாமர தர்மவார்தன பெற்றுக்கொண்டார். 2022 ஆம் ஆண்டின் சிறந்த தடகள வீராங்கனையாக குத்துச்சண்டையை பிரதிநிதித்துவப்படுத்திய சிரேஷ்ட வான்படை வீராங்கனை  பெண் சஜீவனி குரே  அவர்கள் ஃப்ளைட் லெப்டினன்ட் பிரியா அபேயவீர குணவர்தன  கோப்பையை வெற்றிபெற்றார்.

2023 ஆம் ஆண்டின் சிறந்த வீரராக பளுதூக்குதல் விளையாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய சிரேஷ்ட வான்படை வீரர்  மதுஷாந்த ஜயதிலக்க  ஃப்ளைட் லெப்டினன்ட் ஏ வர்தராசா நினைவுக் கிண்ணத்தை வென்றதுடன் 2023 ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக கிரிக்கெட் விளையாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய சார்ஜன்ட் ஓஷதி ரணசிங்க ஃபிளைட் லிஃப்ட் வீராங்கனை பிரியா அபேவீரனன்ட் விருதை வென்றார்.

இந்த நிகழ்வில்  விமானப்படை தளபதி , விமானப்படை பதவிநிலை பிரதானி மற்றும் பணிப்பாளர்கள் அதிகாரிகள் வீரவீராங்கனைகள் கலந்துகொண்டனர்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை