நீலகிரி மஹா சேயாவில் புனித நினைவுசின்னக்கள் மாபெரும் நிகழ்வுடன் வைக்கப்பட்டன.
10:14am on Tuesday 30th July 2024
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு)  மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆகியோரின்  பங்கேற்பில்  2024 ஜூலை 15 புனித நினைவுச்சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்கள் வரலாற்று சிறப்புமிக்க நீலகிரி மகா சேயாவில் வைபவ ரீதியாக வைக்கப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், லஹுகலவில் பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மகா சேயாவை புனரமைக்கும் பணியை விமானப்படை மேற்கொண்டது. நீலகிரி மஹா  சேய  லாஹுகல  தேசிய பூங்காவின் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது மற்றும் மகுல் மகா விகாரை லாஹுகலவின் ஒரு பகுதியாகும். மேலும் கிழக்கு மாகாணத்தின் மிகப் பெரிய ஸ்தூபியாக தொல்பொருள் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட இது கி.மு 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது, 215 அடி உயரமும் 104 அடி அகலமும் கொண்டது.

இலங்கை விமானப்படையின் பூரண பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட நீலகிரி மஹா  சேயவில் பிரித் வழிபாடுகளுடன் புனித நினைவுசின்னக்கள் வைக்கப்பட்டன  இந்த நிகழ்வில்  பிரதான பௌத்த மதகுருமார்கள் உற்பட இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே, சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் ஜெனரல் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் துசித மெண்டிஸ் மற்றும் மஹா சங்கரத்ன  உட்பட பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை