ஆஸ்திரேலிய தூதுக்குழுவினர் விமானப்படை தளபதியை முதல் பாதுகாப்பு கொள்கை பேச்சுவார்த்தைக்காக சந்தித்தனர்
8:55pm on Saturday 31st August 2024
அவுஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களத்தின் மூன்று பேர் கொண்ட தூதுக்குழுவினர் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை 31 ஜூலை 2024 அன்று விமானப்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர். வடக்கு மற்றும் தெற்காசியாவிற்கான உதவிச் செயலாளர் திருமதி கரேன் ராட்ஃபோர்ட் தலைமையிலான குழுவில் உதவிப் பணிப்பாளர் திரு. லாச்லான் சிலர் மற்றும் கொள்கை அதிகாரி திரு. நோஹ் டயமன்பௌலோஸ் ஆகியோர் அடங்குவர். தூதுக்குழுவினருடன் ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் அமண்டா ஜான்ஸ்டன் இருந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் விமானப்படைக்கும் அவுஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களத்திற்கும் இடையிலான ஆரம்ப பாதுகாப்புக் கொள்கை கலந்துரையாடல்களை ஆரம்பிப்பது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. பயனுள்ள மற்றும் சுமூகமான கலந்துரையாடலின் பின்னர், நிகழ்வைக் குறிக்கும் வகையில் விமானப்படைத் தளபதி மற்றும் வருகை தந்த பிரமுகர்களுக்கு இடையில் நினைவுசின்னக்கள்  பரிமாற்றம் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை