2024 ம் ஆண்டுக்கான விமானப்படை வலைப்பந்து இடைநிலை சாம்பியன்ஷிப் போட்டிகள்.
6:30pm on Thursday 5th September 2024
2024 ஆம் ஆண்டுக்கான அலகுகளுக்கிடையேயான வலைப்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிகள் 08 ஆகஸ்ட் 2024 அன்று கொழும்பு இலங்கை விமானப்படை சுகாதார முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.ஸ்ரீ ஜயவர்தனபுர சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி அனுஷா தர்ஷி, விமானப்படை வலைப்பந்து அணியின் தலைவர் எயார் கொமடோர் சுரேகா டயஸ், விளையாட்டு பணிப்பாளர் எயார் கொமடோர் சமநாத வீரசேகர, ஸ்ரீ ஜயவர்தனபுர விமானப்படை தள தளபதி எயார் கொமடோர் ருவன் சந்திமா மற்றும் விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் இறுதிப்போட்டியில் கலந்து கொண்டனர்.

சீனக்குடா  அகாடமி 2024ம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் 19-14 என்ற கணக்கில் விமானப்படை தளம் ரத்மலானை தோற்கடித்தது.  பட்டத்தை சுவீகரித்துக்கொண்டனது  பெண் அதிகாரி கேடட் விக்கிரமசிங்க PDJA சிறந்த பந்து வீச்சாளராகவும், விமானப்படை சீனக்குடா  கல்விப்பீடத்தை  பிரதிநிதித்துவப்படுத்தும் பிளைன் ஒபிசெர்  சஞ்சலா மதுஷானி சிறந்த கீப்பராகவும் விருது பெற்றார். ரத்மலானை விமானப்படைத் தளத்தைச் சேர்ந்த ஃப்ளைட் லெப்டினன்ட் மனுஷி டி சில்வா சிறந்த சகலதுறை ஆட்டக்காரராகத் தெரிவானார்.

சீனக்குடா விமானப்படை கல்விப்பீடத்தியின்  ஃப்ளைட் லெப்டினன்ட் ஜெயனி ஹேவாபத்திரன 2024 இன் யூனிட் நெட்பால் சாம்பியன்ஷிப்பின் வலைப்பந்து ராணியாக முடிசூட்டப்பட்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை