விமானப்படை ஜூடோ அணி மூன்றாவது கனடிய நட்பு சவால் கோப்பை ஜூடோ சாம்பியன்ஷிப் 2024 வென்றது
11:30am on Saturday 21st September 2024
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் விளையாட்டு அமைச்சின் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற 2024 3வது கனடிய நட்பு சவால் கிண்ண ஜூடோ சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை விமானப்படை ஜூடோ அணி மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. இலங்கை ஜூடோ சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியானது முன்னாள் தேசிய சம்பியனான சமிந்த வீரசிங்கவின் பிரதான அனுசரணையை வழங்கியிருந்தது. இருபது (20) சுயாதீன விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த 140 இற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களின் பங்குபற்றுதலுடன் ஏழு (07) எடைப் பிரிவுகளின் கீழ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை மாலைதீவிற்கான கனேடிய உயர்ஸ்தானிகர் திரு எரிக் வோல்ஷ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் விமானப்படை ஜூடோ சம்மேளனத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் டாமியன் வீரசிங்க மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இலங்கை விமானப்படை ஜூடோ அணிகள் ஆடவர் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் தொடர்ந்து மூன்றாவது தடவையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கலப்பு குழு போட்டியில் தங்கப் பதக்கம் உட்பட 9 தங்கப் பதக்கங்கள், 10 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கலப் பதக்கங்களை வென்று தமது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தினர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை