விமானப்படை “AERO BASH 2024” கல்வி மற்றும் தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சி திருகோணமலையில்.
12:43pm on Saturday 21st September 2024
சீனக்குடா  இலங்கை விமானப்படை  அகாடமியால் ஏற்பாடு செய்யப்பட்ட 'AERO BASH 2024' கல்வி, தொழில்நுட்ப மற்றும் வர்த்தக கண்காட்சி 22 ஆகஸ்ட் 2024 அன்று விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமானது.  இந்த கண்காட்சி 2024 ஆகஸ்ட் 26 வரை வித்யாபீட வளாகத்தில் நடைபெறும்.

Aero Bash" 2024 கல்வி தொழில்நுட்ப மற்றும் வர்த்தக கண்காட்சியில் இலங்கை அரச பல்கலைக்கழகம்கள் தனியார் பல்கலைக்கழகம்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வியாபார மற்றும் தொழில்நுப்ப கூடாரங்கள் என்பன காட்சிப்படுத்தப்படது.


இந்த கண்காட்சியில்  இலங்கை விமான படையின் விமான சாகசங்கள், விமானப்படை பரசூர் வீரர்களின் பரசூட் சாகசங்கள், விமானப்படை மோப்ப நாய்களின் சாகச நிகழ்வுகள், விமானப்படை மீட்பு குழுவினரின் விசேட மீட்பு நடவடிக்கை தொடர்பான காட்சிகள், மற்றும் அங்கம்புர மற்றும் தற்காப்பு கலை காட்சிகள், விமானப்படை பேண்ட மற்றும் அணிவகுப்பு குழுவினரின் விசேட காட்சிகள், இரவு நேர இசை நிகழ்ச்சிகள் போன்ற பல நிகழ்ச்சிகள் இந்த நிகழ்வில்  உள்ளடங்குகின்றன.

 இந்த நிகழ்வில் விசேடமாக இலங்கையின் முதல் முறையாக கிழக்கு மாகாணத்தில் டெண்டம் ஜம்ப் சாகச நிகழ்வும் இடம்பெற உள்ளது, இதன் மூலம் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை பெற முடியும். இந்த நிகழ்வுகள் தினந்தோறும் மதியம் 3:00  மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ளது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை