இன்டர்-யூனிட் ஜூடோ சாம்பியன்ஷிப் 2024
10:44pm on Thursday 26th September 2024
 விமானப்படை தளங்களுக்கு  இடையிலான  ஜூடோ சாம்பியன்ஷிப் 02 செப்டம்பர் 2024 முதல் 04 செப்டம்பர் 2024 வரை விமானப்படை கட்டுநாயக்க   உள்ளக விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பயிற்சிப் பணிப்பாளர் வைஸ் மார்ஷல் டி.ஐ. பெர்னாண்டோ கலந்துகொண்டார்.

ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சம்பியன்ஷிப்பை அனுராதபுரம் விமானப்படை தளமும், இரண்டாம் இடத்தை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே விமானப்படை தளமும், ஒட்டுமொத்த மகளிர் சாம்பியன்ஷிப்பை கட்டுநாயக்க விமானப்படை தளமும்,  இரண்டாம் இடத்தை ரத்மலான விமானப்படையும் வென்றன.

விமானப்படை ஜூடோ அணியின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் டி.பி.வி வீரசிங்க, கட்டுநாயக்க விமானப்படை தள தளபதி எயார் வைஸ் மார்ஷல் எஸ்.டி.ஜி.எம் சில்வா, விமானப்படை ஜூடோ அணியின் செயலாளர் குரூப் கப்டன் எம்.ஏ.டி.சி. குணசிங்க உட்பட கௌரவ அதிதிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை