பங்களாதேஷ் ஆயுதப்படைகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் குழு ஒன்று விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளது.
11:14am on Monday 7th October 2024
பங்களாதேஷ் ஆயுதப் படைகளின் பாதுகாப்பு ஆலோசகரின் தூதுக்குழு 19 செப்டம்பர் 2024 அன்று இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தது. தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் முகமது ஷஹீனுல் ஹக் தலைமையில் 21 அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். தூதுக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை சந்தித்து பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர், இலங்கை விமானப்படையின் பணிப்பகத்தின் விமானப் பாதுகாப்புப் பணிப்பாளர் குரூப் கப்டன் வஜிர ஜயக்கொடி, இலங்கை விமானப்படையின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.
அதன் பின்னர், இலங்கை விமானப்படையின் பணிப்பகத்தின் விமானப் பாதுகாப்புப் பணிப்பாளர் குரூப் கப்டன் வஜிர ஜயக்கொடி, இலங்கை விமானப்படையின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.