கட்டுநாயக்க விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டார்.
கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரியின் பாரம்பரிய கையளிப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி தள வளாகத்தில் இடம்பெற்றது, அங்கு வெளியேறும் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்   சில்வா அவர்களினால் புதிய கட்டளை அதிகாரி எயார் கொமடோர் ஜயவர்தனவிடம்   பதவியை உத்தோயோகபூர்வமாக  கையளித்தார். பதவி விலகும் எயார் வைஸ் மார்ஷல் SDGM சில்வா விமானப்படை தலைமையகத்தில் பயிற்சிப் பணிப்பாளர் நாயகமாக பதவியேற்க உள்ளார்.

	
	
	
	
	
	


















		






