பாதுகாப்பு அமைச்சின் புதிய பாதுகாப்பு செயலாளர் விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
2:27am on Thursday 7th November 2024
எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தா  (ஓய்வு) பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவியேற்ற பின்னர் 07 அக்டோபர் 2024 அன்று விமானப்படை தலைமையகத்திற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

அவர் வருகையை அடுத்து, இலங்கை விமானப்படை வர்ண அணிவகுப்பு பிரிவினால் செயலாளருக்கு கௌரவிப்பு மரியாதை வழங்கப்பட்டது. பாதுகாப்பு செயலாளரை ஸ்ரீ ஜயவர்தனபுர விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் ருவன் சந்திமா அன்புடன் வரவேற்றார்.

பின்னர் விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ செயலாளரை வரவேற்று விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இதனையடுத்து பாதுகாப்பு செயலாளர் விமானப்படை தளபதி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த விசேட நிகழ்வை நினைவுகூரும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் விமானப்படை தளபதி ஆகியோருக்கு இடையில்  நினைவுசின்னக்கள்   பரிமாறிக்கொள்ளப்பட்டது.

செயலாளர் பல்வேறு இயக்குனரகங்களுக்கு விஜயம் செய்தார், அங்கு விமானப்படையின் விமான நடவடிக்கைகளின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர, விமானப்படையின் விமான நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கமளித்தார்.

அவர் தனது உரையில், ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு எவ்வித தடையுமின்றி நலத்திட்ட உதவிகளை அரசு தொடர்ந்து வழங்கும் என உறுதி அளித்தார். தேசத்தின் முன்னேற்றத்திற்காக அனைத்து சேவை உறுப்பினர்களும் தங்களால் இயன்றவரை உழைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் மேலும் வலியுறுத்தினார். தனது உரையின் பின்னர் அதிகாரிகள் மற்றும் விமானப்படையினருடன் சிநேகபூர்வமாக உரையாடி விஜயத்தை நிறைவு செய்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை