விமானப்படைத் தளபதி தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் விருந்தினர் விரிவுரையை நடாத்தினார்.
3:00am on Thursday 7th November 2024
தேசிய பாதுகாப்பு கல்லூரியில் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி முப்படை மற்றும் பொலிஸ் பாடநெறி இலக்கம் 02 அதிகாரிகளுக்கு "விமானப் படைகளுக்கான தெற்காசியாவின் பாதுகாப்பு இயக்கவியலைப் புரிந்துகொள்வது; " என்ற தலைப்பில் அழைக்கப்பட்ட விரிவுரையை வழங்க எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அழைக்கப்பட்டார்
தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கு வருகை தந்த விமானப்படைத் தளபதியை, பாதுகாப்புக் கல்லூரியின் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் மூத்த பணிப்பாளர் (இராணுவம்) பிரிகேடியர் ரொஹான் மெதகொட வரவேற்றதுடன்அதன் பின்னர், தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் சிரேஷ்ட பணிப்பாளர் (விமானப்படை) எயார் கொமடோர் அமித ஜயமஹா,அவர்கள் விமானப்படைத் தளபதி அவர்களின் உரைக்கு முன் அறிமுகக் குறிப்பு ஒன்றைச் செய்து பின்னர் விமானப்படைத் தளபதியின் உரைக்கான நடவடிக்கைகளை ஒப்படைத்தார்.
இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில், நிகழ்வின் இறுதியில் விமானப்படைத் தளபதி மற்றும் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கட்டளைத் தளபதி ஆகியோருக்கு இடையில் நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவின் தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு விஜயம் செய்ததை நினைவு கூறும் வகையில், விருந்தினர் புத்தகத்தில் வாழ்த்துக் குறிப்பும் வைக்கப்பட்டிருந்தது.