2024- 49வது தரக் கட்டுப்பாட்டு வட்டங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கை விமானப்படை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
12:46am on Tuesday 7th January 2025
இலங்கை தரம் மற்றும் உற்பத்தித்திறன் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தரக்கட்டுப்பாட்டு வட்டங்கள் தொடர்பான 49வது சர்வதேச மாநாடு 'தரம், உற்பத்தித்திறன் மற்றும் புத்தாக்கத்திற்கான தேடுதல்' என்ற தொனிப்பொருளின் கீழ் 2024 நவம்பர் 11 முதல் 13 வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகம் மற்றும் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜப்பான், தென் கொரியா, சீனா உள்ளிட்ட 14 ஆசிய நாடுகள் பங்கேற்றன.
2023 ஆம் ஆண்டு இலங்கை தரம் மற்றும் உற்பத்தித்திறன் சங்கத்தினால் நடத்தப்பட்ட தரம் மற்றும் உற்பத்தித்திறன் தொடர்பான தேசிய மாநாட்டில் இலங்கை விமானப்படையால் வடிவமைக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட வெப்பமான ஆக்சிஜன் தெரபி (HHOT) அலகு காட்சிப்படுத்தப்பட்டது. இதற்காக இலங்கை விமானப்படைக்கு தங்க விருது கிடைக்கப்பெற்றது.
விங் கமாண்டர் ஜே.டி.என்.பெரேரா, விங் கமாண்டர் என்.கே.அபேவர்தன, ஸ்கொற்றன் ளீடர் கே.ஆர்.ஆர்.என்.புஷ்பகுமார, ஸ்கொற்றன் ளீடர் டபிள்யூ.எச்.பண்டாரநாயக்க, வாரென்ட் அதிகாரி ஜி.எச்.எஸ்.நிரோஷன மற்றும் பிளைட் சார்ஜன்ட் ஜெயசிங்க ஜி.டபிள்யூ.எஸ். விமானப்படை தர மேம்பாட்டுக் குழு அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளைக் கொண்டிருந்தது.
நவம்பர் 14, 2024 அன்று விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை சந்தித்த குழுவினர், தரக் கட்டுப்பாட்டு வட்டங்களுக்கான 49வது சர்வதேசப் போட்டியில் வென்ற தங்க விருதை அதிகாரப்பூர்வமாகப்காட்சிப்படுத்தினர் .விமானப்படை தளபதி அணியின் முயற்சிகளையும் அவர்களின் சாதனைகளையும் பாராட்டினார். பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர், எயார் வைஸ் மார்ஷல் இந்திக்க விக்ரமசிங்க மற்றும் பணிப்பாளர் தர உத்தரவாதம், எயார் கொமடோர் சந்திமால் ஹெட்டியாராச்சி ஆகியோரும் இந்த நிகழ்வில் குழுவுடன் சென்றிருந்தனர்.