கட்டுகுருந்த விமானப்படை தளம் 40வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.
9:56pm on Wednesday 8th January 2025
கட்டுகுருந்த விமானப்படை தளம் தனது 40வது ஆண்டு விழாவை 2024 நவம்பர் 16 அன்று கொண்டாடியது. 19, நவம்பர்  2024 அன்று, விழாக்கள் நடந்தன. கட்டளை அதிகாரி குரூப் கப்டன் எம்.பி.அபேவிக்ரம அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து அதிகாரிகள், ஏனைய பதவிகள் மற்றும் சிவில் ஊழியர்களின் ஆதரவுடன் ஒழுங்கமைக்கப்பட்ட சமூக சேவை திட்டங்கள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுடன் இந்த நிகழ்வு கொண்டாடப்பட்டது.

கொண்டாட்டத்துடன் மதுகந்த ஆலயம், அதகமை அமரசேகர ஆரம்ப பாடசாலை மற்றும் கட்டுகுருந்த விமானப்படை தளம் அண்மித்த பகுதியில்  ஒரு நாள் சிரமாதன நிகழ்ச்சியும் இடம்பெற்றது.  மேலும், களுத்துறை பார்வையற்றோர் சங்கத்திற்கு தண்ணீர் போத்தல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

மேலும் அன்றய தினம் காலை அணிவகுப்பு கட்டளை அதிகாரியினால் மதிப்பாய்வு செய்யப்பதுடன் பின்வரும் வீரர்களுக்கு  நற்சான்றுதல்களும் கட்டளை அதிகாரியினால் வழங்கிவைக்கப்பட்டது  

வாரென்ட் அதிகாரி  டபிள்யூ.பி. இந்திக்க
சார்ஜென்ட் சுனில் எம்.ஜே.பி
கோப்ரல் வீணக்கொடி எம்.எஸ்.சி
கோப்ரல் சமந்த எம்.கே

பின்னர், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் முகாம் வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சியை நடத்தியதுடன், நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டி மற்றும் வலைப்பந்து போட்டியுடன் கொண்டாட்ட நாள் நிறைவு பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை