இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம் (SLESA), "பாப்பி தினம்" என்று அழைக்கப்படும் நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில், 2024 நவம்பர் 24
12:32am on Friday 31st January 2025
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம் (SLESA), "பாப்பி தினம்" என்று அழைக்கப்படும் நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில், 2024 நவம்பர் 24 அன்று, விஹார மகா தேவி பூங்காவில் உள்ள போர்வீரர்களின் நினைவுச்சின்னத்திற்கு முன்னால், போரில் வீழ்ந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் விழாவை நடத்தியது.இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான அதிமேதகு அனுர குமார திசாநாயக்க அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு), பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யாகொந்தா (ஓய்வு), பாதுகாப்புப் படைத் தலைவர், முப்படைத் தளபதிகள், வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்கள், முன்னாள் முப்படைத் தளபதிகள் மூத்த அதிகாரிகள் மற்றும் முன்னாள் படைவீரர் சங்க உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் , கலந்து கொண்டனர்.
கொழும்பு போர் நினைவுச்சின்னம் முதலில் காலி முகத்திடலில் கட்டப்பட்டது, ஆனால் பின்னர் இரண்டாம் உலகப் போரின் போது அகற்றப்பட்டு அதன் தற்போதைய இடத்தில் மீண்டும் கட்டப்பட்டது. இந்த கல்லறையில் முதலாம் உலகப் போரில் இறந்தவர்களின் பெயர்கள் உள்ளன, அதே நேரத்தில் அதன் பின்னால் உள்ள நினைவுச் சுவரில் இரண்டாம் உலகப் போரில் இறந்தவர்களின் பெயர்கள் உள்ளன.