இலங்கை விமானப்படை திறந்த ஸ்குவாஷ் போட்டி -2024
12:26pm on Tuesday 11th February 2025
இலங்கை விமானப்படையினால் 16வது தடவையாக நடாத்தப்பட்ட விமானப்படை திறந்த
ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் சான்றிதழ்
வழங்கும் நிகழ்வு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இரத்மலானை விமானப்படை தள ஸ்குவாஷ் வளாகத்தில் நடைபெற்றது.
சர்வதேச விதிகளுக்கு அமைவாக இலங்கை ஸ்குவாஷ் சம்மேளனத்தின் பூரண மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட விமானப்படை திறந்த ஸ்குவாஷ் போட்டிக்காக, இந்திய விமானப்படை வீரர்கள், நாட்டின் முன்னணி ஸ்குவாஷ் வீரர்கள் மற்றும் புதிய வீரர்கள் உட்பட 450ம் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றினர் இப்போட்டியில், சர்வதேச தரவரிசைப் போட்டிகளாக திறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு போட்டிகள் நடைபெற்றன.
இந்தப் போட்டியின் திறந்த ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டிக்கு மெட்மல் வுட் மற்றும் ஷமில் வக்கீல் தகுதி பெற்றனர் மற்றும் ஷமில் வக்கீல் 03 க்கு 0 என்ற சுற்றில் வெற்றி பெற்று எயார் சீஃப் மார்ஷல் PH மெண்டிஸ் சவால் கிண்ணத்தை வென்றார்.இந்திய வீராங்கனை அஞ்சலி சாமுவேல் மற்றும் கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலய வீராங்கனை சனித்மா சினலி ஆகியோர் திறந்த பெண்கள் பிரிவின் இறுதிப் போட்டிக்கு போட்டியிட்டதுடன், இந்திய வீராங்கனை அஞ்சலி சாமுவேல் எயார் சீப் மார்ஷல் ஹரி குணதிலக்க நினைவுக் கிண்ணத்தை 03 க்கு 02 எனும் சுற்றில் வென்று சாதனை படைத்துள்ளார்.