மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை விமானப்படை நாட்டில் இருந்து புறப்பட்டது.
3:01pm on Tuesday 11th February 2025
மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர் படையணியைச் சேர்ந்த 108 பேர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மத்திய ஆபிரிக்க குடியரசை நோக்கி புறப்பட்டனர்.
இலங்கை விமானப்படை 2014 ஆம் ஆண்டு முதல் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக பங்களித்துள்ளதுடன், இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர் படைப்பிரிவின் குழுவினர் அமைதி காக்கும் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். படைவீரர்களுக்கான போக்குவரத்து, விஐபி போக்குவரத்து, உணவு/பொருட்கள் போக்குவரத்து, உள்நாட்டு விமான பயனம்கள் , பாராசூட் மூலம் சரக்குகளை இறக்குதல், மருத்துவக் குழு போக்குவரத்து உள்ளிட்ட பல சிறப்புப் பணிகளுக்கு தங்களது பங்களிப்பை இக்குழுவினர் வழங்கிவருகின்றனர்.
மேலும் இதற்கு முன்னர் மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்காக பயணம் செய்த 92 பேர் அடங்கிய விமானப்படை குழுவினர் அவர்களின் சேவை காலம் நிறைவடைந்ததன் பின்பு மீண்டும் நாட்டை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன்போது சர்வதேச விமான நிலையத்தில் அனுப்பிவைப்பதற்கும் வரவேற்றப்பதற்கும் விமானப்படை அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

Departure
Arrival