புதிய விமானப்படைத் தளபதி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம்
11:56am on Monday 24th March 2025
விமானப்படையின் புதிய தளபதியாக பதவியேற்ற பிறகு, எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க  அவர்கள் கடந்த 08 பிப்ரவரி 2025 அன்று கண்டியில் உள்ள புனித ஸ்ரீ தலதா மாளிகைக்கு வழிபாடுகளை மேற்கொண்டு  ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

புதிய விமானப்படைத் தளபதி முதலில் ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று புனித தாது  சின்னத்தை வணங்கி ஆசிகளைப் பெற்ற பின்னர் அவர் மல்வத்த மகாவிஹாரைக்கு   சென்று  வணக்கத்திற்குரிய திப்படுவாவா ஸ்ரீ சித்தார்த்த சுமங்கலாபிதான மகாநாயக்க தேரரை  சந்தித்து ஆசிகளைப் பெற்றார். அதன் பின்னர், விமானப்படைத் தளபதி அவர்கள்  அஸ்கிரி மகா விஹாரைக்குச் சென்று, அஸ்கிரி மகா விஹாரைப் பிரிவின் மகாநாயக்கரான வணக்கத்திற்குரிய வாரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பங்கநாநந்த ஞானரதன மகாநாயக்க  தேரரை சந்தித்து அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி கிருஷாந்தி எதிரிசிங்க உட்பட விமானப்படை குழுவினர்  குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை