மத்திய ஆப்பிரிக்க அரசாங்கத்தின் சவாலான செயற்பாடின் போது 14 ஆப்பிரிக்க வீரர்களை பாதுகாப்பாக மீட்ட இலங்கை விமானப்படை அமைதி காக்கும் படைப்பிரிவினர்.
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்காக (UNMISS) பணியமர்தப்பட்டுள்ள இலங்கை விமானப்படையின் விமானப் பிரிவின் குழு, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் ஓபோ பகுதியிலிருந்து, மத்திய ஆப்பிரிக்க AAKG ஆயுதக் குழுவால் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளான பகுதியான Bambouti பம்பௌட்டியில் நிறுவப்பட்ட தற்காலிக செயல்பாட்டுத் தளத்திற்கு (TOB) 2025 டிசம்பர் 31, அன்று விமானம் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விமானம் மூலம் கொண்டு சென்றது.
இதன்போது ஹெலிகாப்டர் தரை இறங்கும் சந்தர்ப்பத்தில் AAKG ஆயுதக் குழுவிடமிருந்து அந்த பாதுகாப்பு படைத்தளத்திற்கும் ஹெலிகாப்டருக்கும் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக படைத்தளத்தில் இருந்து 14 ஆப்ரிக்க இராணுவ வீரர்களை பாதுகாப்பாக மீட்டெடுத்து ஓபோ பகுதிக்கு கொண்டு வந்தனர்.
இந்த செயற்பாட்டிற்கு தலைமை விமானியாக விங் கமாண்டர் நூரான் பெரேரா, இணை விமானியாக பிலைட் லெப்டினன்ட் ஷஃப்ரித் இக்பால், விமான பொறியாளராக பிலைட் லெப்டினன்ட் பிரவீன் ரத்நாயக்க மற்றும் குழு உறுப்பினர்கள் தீவிரமாக செயல்பட்டனர்.