இலங்கை விஜயம் மேற்கொண்ட இந்திய விமானப்படைத் தளபதி, எயார் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், இலங்கை விமானப்படை தளபதியைச் சந்தித்தார்
இந்திய விமானப்படைத் தளபதி, எயார்  சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங்,   (19 மே 2026) விமானப்படைத் தலைமையகத்தில், இலங்கை  விமானப்படைத் தளபதி, எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்கவைச் சந்தித்தார்.

வருகை தந்த  இந்திய விமானப்படை தளபதியை ஸ்ரீ ஜெயவர்தனபுர இலங்கை விமானப்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி, எயார்  கொமடோர் புத்திக பியசிறி,   அவர்கள்  வரவேற்றார். மேலும், இலங்கை விமானப்படையின் வர்ண அணிவகுப்பு பிரிவினால் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

பிராந்திய விமானப்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கூட்டுப் பயிற்சி, தொழில்நுட்ப அறிவுப் பரிமாற்றம் மற்றும் கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் ஆகியவை குறித்த கலந்துரையாடல்களை எளிதாக்கும் நோக்கில், இலங்கை விமானப்படைத் தளபதியின் அழைப்பின் பேரில் இந்திய விமானப்படைத் தளபதி தற்போது இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்திய விமானப்படை தளபதி  இலங்கை விமானப்படை  தலைமைத் தளபதி மற்றும் விமானப்படை நிர்வாகக் குழுவைச் சந்தித்ததைத் தொடர்ந்து,  தளபதியின் அலுவலகத்தில் இரு  தளபதிக்களுக்கும் இடையே அதிகாரப்பூர்வ நினைவுப் பலகைகள் பரிமாறப்பட்டன.

Guard of Honour



Commander Call On
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை