2026.ம் ஆண்டுக்கான வருடாந்திர கோல்ஃப் குவாட்ரங்கள் கோப்பை (Quadrangle Cup 2026) போட்டிகள்.
இலங்கை விமானப்படையால்  5வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'குவாட்ரங்கள் கோப்பை 2026' Quadrangle Cup 2026 (மகளிர் மற்றும் ஆடவர்) கோல்ஃப் போட்டி, 2026 ஜூன் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. சுற்றுலாத் தலமான சிகிரியா விமானப்படை ஈகிள் சிடடெல்  கோல்ஃப் மைதானத்தில் இப்போட்டி முதன்முறையாக நடைபெற உள்ளது.

இப்போட்டியின் பிரதான அனுசரணையாளர்  JAT ஜட்  ஹோல்டிங் (பிரைவேட்) லிமிடெட்  ஆகும்.  அதற்கான காசோலையை ஜேஏடி ஹோல்டிங் (பிரைவேட்) லிமிடெட்டின் நிர்வாக பணிப்பாளர்  திரு. அலியன் குணவர்தன, விமானப்படையின் பிரதித் தலைமை தளபதி எயார்  வைஸ் மார்ஷல் கிஹான் செனவிரத்னவிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.

பிரவுன்ஸ் ஈவி (பிரைவேட்) லிமிடெட், எல்ஓஎல்சி ஃபைனான்ஸ் லிமிடெட், ஜெட்வின் ஹோட்டல்ஸ் லிமிடெட், என்சிஜி ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட், டிவிஎஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் ஆகியவை இப்போட்டியின் இணை அனுசரணையாளர்களாகும் . 

நாட்டின்  முன்னணி கோல்ஃப்  கழகம்களான  கொழும்பு ராயல்ஸ், விக்டோரியா, நுவரெலியா மற்றும் ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ் ஆகியவற்றைச் சேர்ந்த ஏராளமான உள்ளூர் வீரர்களும் இந்தப் போட்டிக்கான தங்கள் பதிவை உறுதி செய்துள்ளனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை