விமானப்படைத் தளபதியினால் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் தகுதிப் பதக்கங்கள் வழங்கும் விழா விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
விமானப்படைத்  தளபதியினால்  பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் தகுதிப் பதக்கங்கள் வழங்கும் விழா 2026 ஜூன் 16 அன்று விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் விமானப்படைத் தளபதி, எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க கலந்துகொண்டார். 

விமானப்படைக்கு ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் தனிநபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், தேவையான பயிற்சிப் படிப்பை வெற்றிகரமாக முடித்த ஒரு தனிநபருக்கு லார்ட்மாஸ்டர் இலச்சினை   வழங்கப்பட்டது. 

விமானப் பொறியியல் பணிப்பாளர் நாயகம், எயார்  வைஸ் மார்ஷல் இந்திக  விக்ரமசிங்க, பொதுப் பொறியியல் பணிப்பாளர் நாயகம், எயார்  வைஸ் மார்ஷல் பிரசங்க மார்டினோ, பொது மின்னணுவியல் மற்றும் கணினிப் பொறியியல் பணிப்பாளர் நாயகம்,எயார்  வைஸ் மார்ஷல் அசிதா ஹெட்டியாராச்சி, தரைவழிச் செயல்பாடுகள் பணிப்பாளர் நாயகம், எயார்  வைஸ் மார்ஷல் வஜிர சேனதீரா, வழங்கல் பணிப்பாளர் நாயகம்,எயார்  வைஸ் மார்ஷல் கிளாட்வின் அத்தபத்து, நிர்வாகப் பணிப்பாளர் நாயகம், எயார் வைஸ் மார்ஷல் துஷாரா சிறிமன்னே, விமானப் போக்குவரத்து சேவைகள் பணிப்பாளர் நாயகம், எயார்  வைஸ் மார்ஷல் நந்திக சல்காது  சிவில் நிர்வாகம் பணிப்பாளர் நாயகம், பிரியங்கனி ஹெவரத்ன மற்றும் பிற சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை