இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைக்கு இடையேயான சந்திப்பு
இலங்கை கடற்படையின் 27வது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ, விமானப்படை மார்ஷல் பந்து எதிரசிங்கவை 06 ஜூலை அன்று விமானப்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
ஸ்ரீ ஜெயவர்தனபுர விமானப்படைத்தள கட்டளை அதிகாரி எயார் கொமடோர் புத்திக பியசிறி கடற்படைத் தளபதியை வரவேற்றார். மேலும், விமானப்படையின் கொடிவர்ண அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது
இந்த சந்திப்பின் போது, இரு தரப்பினருக்கும் இடையேயான கூட்டுப் பயிற்சி, தொழில்நுட்ப அறிவுப் பரிமாற்றம் மற்றும் கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடற்படைத் தளபதி, தலைமைத் தளபதி, பிரதித் தலைமைத் தளபதி மற்றும் விமானப்படை பணிப்பாளர் குழு உறுப்பினர்களையும் சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ பயணத்தை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன.