இலங்கை இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதிக்கு பிரியாவிடை சந்திப்பு நடத்தினார்.
இலங்கை இராணுவத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் லசந்த  ரொட்ரிகோ    (30 ஜூலை 2026) விமானப்படைத் தலைமையகத்தில், இலங்கை விமானப்படைத் தளபதி, எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்கவுக்கு பிரியாவிடை சந்திப்பு நடத்தினார்.

விமானப்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த லெப்டினன்ட் ஜெனரல் ரொத்ரிகோவை, ஸ்ரீ ஜெயவர்தனபுர இலங்கை விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி, எயார்  கொமடோர் புத்திக பியசிறி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, இலங்கை விமானப்படையின்  வர்ண அணிவகுப்பு  பிரிவினரால் அவருக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பின்போது, ​​விமானப்படைத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் ரொட்ரிகோ , அவர் நாட்டிற்கு ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைக்காகவும், இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக இருந்த காலத்தில் இலங்கை விமானப்படைக்கு வழங்கிய ஒத்துழைப்பிற்காகவும் நன்றி தெரிவித்தார். தேசியப் பாதுகாப்பிற்கு ஆதரவாக இரு படைகளுக்கும் இடையே பேணப்பட்டு வரும் நெருங்கிய பணி உறவையும் அவர் பாராட்டினார்.

விமானப்படைத் தளபதி , இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ரோட்ரிகோவின் எதிர்கால முயற்சிகளுக்குத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, நாட்டிற்கு அவர் ஆற்றிய மதிப்புமிக்க சேவைக்காகவும் அவருக்கு நன்றி கூறினார். இந்தப் பயணத்தைக் குறிக்கும் வகையில் நினைவுப் பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டதோடு இந்நிகழ்வு நிறைவடைந்தது.
Guard of honour

Farewell call on
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை