அவுஸ்திரேலிய பாதுகாப்புக் கல்லூரி பிரதிநிதிகள் இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம்
அவுஸ்திரேலிய பாதுகாப்புக் கல்லூரியின் (Australian Defence College) பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று 2026 செப்டம்பர் 09ஆம் திகதி இலங்கை விமானப்படை (SLAF) தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டது.
12 அதிகாரிகளைக் கொண்ட இக்குழுவிற்கு அவுஸ்திரேலிய பாதுகாப்புக் கல்லூரியின் சிரேஷ்ட பிரதிநிதியான கேர்ணல் ஆடம் ஜெஃப்ரி மெக்கின்னஸ் (Colonel Adam Geoffrey McGuinness) தலைமை தாங்கினார்.
இக்குழுவின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவை மரியாதை நிமித்தம் சந்தித்தனர். இதன்போது, இரு தரப்பினருக்கும் பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுமுகமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இச்சந்திப்பின் நிறைவில், விஜயத்தை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினரும் உத்தியோகபூர்வ நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய பாதுகாப்புக் கல்லூரி பிரதிநிதிகள், இலங்கை விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் மற்றும் விமானப்படையின் பல்வேறு பணிப்பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பணிநிலை அதிகாரிகள் ஆகியோரின் பங்கேற்புடன் அறிவுப் பகிர்வு அமர்வும், கலந்துரையாடல் மற்றும் கேள்வி–பதில் அமர்வும் நடைபெற்றன.
இவ்விஜயம், இலங்கை விமானப்படைக்கும் அவுஸ்திரேலிய பாதுகாப்புக் கல்லூரிக்கும் இடையிலான தொழில்சார் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், அறிவு, அனுபவங்கள் மற்றும் கருத்துக்களைப் பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

Call on the Commander
Knowledge sharing session