இந்திய விமானப்படையின் துணைத் தளபதி இலங்கை விமானப்படைத் தளபதியைச் சந்தித்தார்.
இந்திய விமானப்படையின் துணைத் தளபதியான எயார்  மார்ஷல் அசுதோஷ் தீட்சித், 2026 செப்டம்பர் 09 அன்று இலங்கை விமானப்படைத் தலைமையகத்தில் இலங்கை விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்கவைச் சந்தித்தார்.

வருகை தந்த துணைத் தளபதியை, இலங்கை விமானப்படையின் ஸ்ரீ ஜயவர்தனபுர நிலையத்தின் கட்டளை அதிகாரி எயார்  கொமடோர் புத்திக பியசிரி வரவேற்றதுடன், இலங்கை விமானப்படையின் 'வர்ணஅணிவகுப்பு ' (Colour Wing) பிரிவினரால் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இரு விமானப்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், கூட்டுப் பயிற்சி, தொழில்நுட்ப அறிவுப் பரிமாற்றம் மற்றும் கடல்சார் கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவை குறித்த கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் நோக்கில், இலங்கை விமானப்படைத் தளபதியின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த விஜயத்தின் போது, ​​எயார்  மார்ஷல் அசுதோஷ் தீட்சித், விமானப்படையின் தலைமை அதிகாரி மற்றும் விமானப்படை நிர்வாகக் குழு உறுப்பினர்களையும் சந்தித்தார். தளபதியின் அலுவலகத்தில் இலங்கை விமானப்படைத் தளபதி மற்றும் இந்திய விமானப்படையின் துணைத் தளபதி ஆகியோருக்கு இடையே அதிகாரப்பூர்வ நினைவுப் பரிசுகள் (plaques) பரிமாறிக் கொள்ளப்பட்டதோடு இந்த விஜயம் நிறைவடைந்தது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை