இலங்கை விமானப்படை விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கான ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி
பில்லியர்ட்ஸ் & ஸ்னூக்கர், கேரம், எல்லே (Elle), ஹேண்ட்பால், படகோட்டம் (Rowing) மற்றும் கயாகிங் (Kayaking) ஆகிய விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த இலங்கை விமானப்படை விளையாட்டு வீரர்-வீராங்கனைகளின் மனரீதியான தயார்நிலை மற்றும் போட்டித்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி ஒன்று  கடந்த  (17 செப்டம்பர் 2026) விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

வரவிருக்கும் முக்கிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகும் வகையில், விமானப்படை விளையாட்டு வீரர்களின் தன்னம்பிக்கை, ஊக்கம் மற்றும் குழு உணர்வை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன், விமானப்படை விளையாட்டுச் சபையின் தலைவரும் விமானப்படைத் தளபதியுமான எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சர்வதேச பயிற்றுவிப்பாளர் கூட்டமைப்பின் (ICF) உறுப்பினரும் தொழில்முறை ஊக்கப்படுத்துநருமான திரு. பா(ba) தியா   அர்த்தநாயக்க அவர்களால் இந்த ஊக்கமளிக்கும் அமர்வு நடத்தப்பட்டது.  நேர்மறையான போட்டி மனப்பான்மையை வளர்த்தல், தன்னம்பிக்கையை அதிகரித்தல், தனிநபர் மற்றும் குழுவின் செயல்திறனை மேம்படுத்துதல், அத்துடன் விளையாட்டு வீரர்களிடையே ஒற்றுமை மற்றும் குழு உணர்வை வளர்த்தல் ஆகியவற்றில் இந்த அமர்வு கவனம் செலுத்தியது.

14-வது பாதுகாப்புப் படை விளையாட்டுப் போட்டிகள் (Defence Services Games) மற்றும் வரவிருக்கும் பிற தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் விமானப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளின் ஒட்டுமொத்த செயல்திறன், மனரீதியான தயார்நிலை மற்றும் போட்டித்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கை விமானப்படை விளையாட்டுச் சபை மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த முன்னெடுப்பு அமைந்துள்ளது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை