இலங்கை விமானப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு போர் விமானக் கட்டுப்பாட்டாளர் மற்றும் சுமை அதிகாரிப் (லோட் மாஸ்டர் ) சின்னம்கள் வழங்கப்பட்டன.
இலங்கை விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற  இந்த நிகழ்வில் , தத்தம் துறைகளில் தேவையான பயிற்சி மற்றும் தகுதிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்த அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்களுக்குப் போர் விமானக் கட்டுப்பாட்டாளர் மற்றும் சுமை  பராமரிப்பு (லோட் மாஸ்டர் ) அதிகாரி  சின்னம்கள்   வழங்கிவைக்கப்பட்டது.

விமானப்படைத் தளபதி, எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்கள் பிரதம விருந்தினராக இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவருடன் விமானச் செயல்பாடுகள் பணிப்பாளர் நாயகம் எயார்  வைஸ் மார்ஷல் தம்மிக டயஸ், தளவாடங்கள் பணிப்பாளர் நாயகம் எயார்  வைஸ் மார்ஷல் கிளாட்வின் அட்டபத்து, விமானப் போக்குவரத்து சேவைகள் பணிப்பாளர் நாயகம் எயார்  வைஸ் மார்ஷல் நந்திக சல்காது   ஆகியோர்  விருந்தினர்களாகவும்   மேலும்  சிரேஷ்ட அதிகாரிகளும் இதன்போது  கலந்துகொண்டனர்.  

மார்ச் 2026-ல், இந்தியாவின் லக்னோவில் உள்ள விமானப் பாதுகாப்புக் கல்லூரியில் ஃபைட்டர் கண்ட்ரோலர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த ஸ்குவாட்ரன் லீடர் ஜே.எம்.எம்.எஸ்.எஸ். ஜெயசிங்க மற்றும் ஸ்குவாட்ரன் லீடர் கே.டி.எல். விஜேரத்ன ஆகியோருக்கு ஃபைட்டர் கண்ட்ரோலர் சின்னமாக்களும்  வழங்கப்பட்டன.

சார்ஜென்ட் லசந்த குமார எச்.பி.சி. மற்றும் கோப்ரல்  பிரியந்த எம்.டி.டி.எம். ஆகியோருக்கு லோட் மாஸ்டர் சின்னக்களும்  வழங்கப்பட்டன.  பிரெவெட்டுகளைப் பெற்றவர்கள், Mi-17 ஹெலிகாப்டரில் 50 மணிநேர விமானப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, தகுதிவாய்ந்த ஹெலிகாப்டர் பயிற்றுவிப்பாளர் மற்றும் மாஸ்டர் லோட் மாஸ்டரால் நடத்தப்பட்ட இறுதி இயக்கச் சோதனையிலும் தேர்ச்சி பெற்றனர்.

இந்த சின்னம்கள்  வழங்கப்படுவது, சிறப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ததைக் குறிப்பதோடு, இலச்சினைகளை  பெற்றவர்கள் தத்தமது துறைகளில் செயல்பாட்டு நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்வதில் வெளிப்படுத்திய தொழில்முறை, அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டையும் பிரதிபலிக்கிறது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை