இலங்கை விமானப்படை (SLAF) வருடாந்த வீதி ஓட்டப் போட்டி - 2026
2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்த விமானப்படை தலங்களுக்கு இடையேயான  வீதி ஓட்டப் போட்டி, 2026 அக்டோபர் 10 அன்று, இலங்கை விமானப்படையின்  கொழும்பு விமானப்படை தளத்தில் அமைந்துள்ள 'ரைபிள் கிரீன்' (Rifle Green) மைதானத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இப்போட்டியில், இலங்கை விமானப்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள், விமானப்படை வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் சிவில் பணியாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

இலங்கை விமானப்படைத் தளபதி, எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். விமானப்படை முகாமைத்துவ சபையின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், ஏனைய தரநிலை வீரர்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் எனப் பலரும் இந்தச் சிறப்பான விளையாட்டு நிகழ்வைக் கண்டுகளிக்க வருகை தந்திருந்தனர்.

ஆண்களுக்கான பிரிவில், கொழும்பு  விமானப்படை தளம்  'ஒட்டுமொத்த சம்பியன்' (Overall Champions) பட்டத்தை வென்றது;  தியத்தலாவ விமானப்படை தளம்     'இரண்டாம் இடத்தைப்' (Runner-up) பெற்றுக்கொண்டது.

பெண்களுக்கான பிரிவில் கட்டுநாயக்க விமானப்படை    தளம் 'ஒட்டுமொத்த சம்பியன்' பட்டத்தைக் கைப்பற்றியது;  தியத்தலாவ  விமானப்படை தளம்  'இரண்டாம் இடத்தைப்' பெற்றுக்கொண்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை