வருடாந்த முகாம் பரிசோதனை 2013 - ஹிங்குரங்கொடை
3:39pm on Monday 3rd June 2013

இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் ஹிங்குரங்கொடை விமானப்படை முகாமில் தனது வருடாந்த பரிசோதனையை 31.05.2013ம் திகதியன்று மேற்கொண்டார்.

எனவே ஹிங்குரங்கொடை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டன்" ஆர்.பி. லியனகமகே விமானப்படை தளபதியினை வரவேற்றார்.

மேலும் விமானப்படைத்தளபதி ஹிங்குரங்கொடை விமானப்படை முகாமின் இல. 07 ஹெலிகாப்டர் பிரிவு, இல. 09  தாக்குதல் ஹெலிகாப்டர் பிரிவு, 02 வழங்கல் மற்றும் பராமரிப்பு டிப்போ மற்றும் இல். 25 ரெஜிமண்ட் பிரிவுகளை பரிசோதனை  செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இறுதியாக இங்கு விமானப்படைத்தளபதி உரையாற்றுகையில் சிறந்த முறையில் சேவையாற்றுமாறும், சிவில் அதிகாரிகளுடன் சிறப்பாக நடந்துகொள்ளுமாரும் விமானப்படை உறுப்பினர்களை வேண்டிக்கொண்டார்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை