‘டுவர் டீ ஹிரு’ சைக்களோட்டப்போட்டி 2013
5:01am on Tuesday 9th July 2013
ஹிரு எப் எம் வானொலியின் 15 வது ஆண்டு நிறைவை ஒட்டி ஹிரு எப்.எம் மற்றும் ஹிரு ரி.வி. இணைந்து நடத்தும் ‘டுவர் டீ ஹிரு’ துவிச்சக்கர ஓட்ட போட்டி தற்போது நடைபெறுகிறது. இந்த போட்டிகள் இரண்டு நாட்களுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
மொத்தமாக 298 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்ட இந்த டுவர் டீ ஹிரு துவிச்சக்கர வண்டி போட்டியின் முதலாவது கட்டம், இன்று காலை 8.30 க்கு கொழும்பு விமானப்படை தலைமையகத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பமானது.
137 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்ட இந்த முதலாவது கட்டம் காலி வீதியின் ஊடாக தெஹிவலை, மொரட்டுவ, பாணந்துறை வரை சென்று பின்னர் அங்கிருந்து பண்டாரகம, ஹொரண, இங்கிரிய, கிரியல்ல ஊடாக ரத்னபுரி, பெல்மதுல்ல நகருடன் பலாங்கொட சென்று பேரூந்து தரிப்பிடத்தில் நிறைவடைந்தது.
இந்த நிலையில் டுவர் டீ ஹிரு துவிச்சக்கர வண்டியின் இரண்டாம் கட்ட போட்டி நாளை காலை 8.30 மணிக்கு பலாங்கொட பேரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகிறது. இந்த இரண்டாம் கட்ட போட்டியானது 161 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்டதாகும். சர்வதேச துவிச்சக்கர வண்டி ஓட்ட போட்டிகளின் விதிமுறைகளுக்கு அமைய இந்த முறையும், டுவர் டீ ஹிரு போட்டியை இலங்கை துவிச்சக்கர இடைக்கால குழு முழுமையாக கண்காணிக்கும்.