ரனவிரு ரியல் ஸ்டார் - 2013
3:02am on Monday 29th July 2013
சுகததாஸ உள்ளக அரங்கில் கடந்த 2013 ஜூலை 27 ம் திகதியன்று இடம்பெற்ற 'ரனவிரு ரியல் ஸ்டார் பாகம் 3' இன் மாபெரும் இறுதிச்சுற்றுப் போட்டிகள் இனிதே நிறைவடைந்தது. இதில் போட்டியிட்ட இறுதி ஐந்து போட்டியாலர்களுக்குமாக பொது மக்களின் ஆதரவாக 8 மில்லியன் எஸ்.எம்.எஸ் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். ரனவிரு ரியல் ஸ்டார் நிகழ்ச்சித் திட்டமானது பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களின் நேரடி வழிகாட்டலின் கீழ் உலகிலேயே முதற்தடவையாக இடம்பெறும் இராணுவத்தினரின் கலைத்திறமைகளை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சித்திட்டமாகும்.
அதிமேதகு ஜனாதிபதி மற்றும் முப்படைகளின் பிரதானியுமான மஹிந்த ராஹபக்ஷ இந் நிகழ்வுக்கான பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களால் இந் நிகழ்வில்வைத்து வரவேற்கப்பட்டார்.
இந் நிகழ்வின் இறுதி ஜந்து போட்டியாளர்களாக இராணுவத்தை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் நதீச் சாரங்க, கோப்ரல் சமின்ட குமார கோப்ரல் மனொஜ் ப்ரசன்ன ஆகியோரும் கடற் படையைச் சேர்ந்த டநுக ரனசிங்க விமானப்படையைச் சேர்ந்த LAC துஷானி பெரேரா ஆகியோரும் தெரிவாகியிருந்தனர்.
இப் போட்டிக்கான வெற்றியாளர்களின் வெற்றியிலக்கின் 60% மான வெற்றி இலங்கை இசைத்துறையைச் சார்ந்த பிரவித்தி பெற்ற நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டதுடன் மிகுதி 40% வெற்றி பொது மக்களின் எஸ்.எம்.எஸ் குறுந்தகவல் மூலமும் வழங்கப்பட்டிருந்தது. 'ரனவிரு ரியல் ஸ்டார் பாகம் 3' இன் வெற்றியாளராக விமானப்படையைச் சேர்ந்த LAC துஷானி பெரேரா தெரிவானதுடன் அவருக்கான20 மில்லியன் பெறுமதியான புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீட்டை முதற் பென்மணி சிரந்தி ராஜபக்ஷ வழங்கிவைத்தார். இரண்டாம் இடத்துக்காக இராணுவத்தை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் நதீச் சாரங்க தெரிவு செய்யப்பட்டதுடன் அவருக்காக 6.7 மில்லியன் பணப் பரிசுடன் டொயோடா நிறுவனத்தின் அன்பளிப்பாக புத்தம் புதிய ஒரு காரும் வழங்கப்பட்டது. அத்துடன் மூன்றாம் இடத்தை பெற்ற இராணுவத்தை சேர்ந்த கோப்ரல் சமின்ட குமாரக்காக2 மில்லியன் பணப் பரிசில் வழங்கப்படுள்ளது. மேலும் நான்காம் ஐந்தாம் இடங்களைப் பெற்ற இராணுவத்தை சேர்ந்த கோப்ரல் மனொஜ் ப்ரசன்ன மற்றும் கடற் படையைச் சேர்ந்த டநுக ரனசிங்க ஆகியோருக்கு தலா ஐந்து இலட்சம் பெறுமதியான பணப் பரிசிலும் வழங்கப்படமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் முதற் பென்மணி சிரந்தி ராஜபக்ஷ, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ, திருமதி அயோமா ராஜபக்ஷ, முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பல உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.