தாய்நாட்டிற்கு சேவை செய்யும் முகமாக வெளியேறிய விமானப்படையினர்
9:18am on Wednesday 22nd December 2010
விமானப்படையை (இல.147 ஆம் நிரந்தர ஆண்கள் பயிற்சி, இல.22 ஆம் தொண்டர் மகளிர் பயிற்சி) சேர்ந்த 464 படையினர் தியதலாவை விமானப்படை பயிற்சிப் பாடசாலையில் இருந்து தமது பயிற்சிகளை முடித்துக்கொண்டு தாய்நாட்டிற்கு சேவை செய்யும் முகமாக கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி விமானப்படையினராக வெளியேறினர்.  

இந்த பயிற்சின் மூலம் முறைப்பட்ட படைப்பயிற்சி, ஆயுதப்பயிற்சி, போர்க் களப்பயிற்சி, படையணித்திறம், வரைபடம் வாசித்தல், விமானப்படை சட்டம், விமானப்படை அமைப்பு, நிர்வாகம் போன்ற கல்வி அறிவுகளை விமானபடையினருக்கு வழங்கப்பட்டது விசேடம்சமாகும்.

இவ் விசேட நிகழ்வில் பிரதம விருந்தினராக விமானப்படை கொழும்பு முகாமில் கட்டளை அதிகாரியான எயார் கொமதோர் விஜித குனரத்ன அவர்கள் கலந்துக் கொண்டார். மேலும் தியதலாவை விமானப்படை முகாம் கட்டளை அதிகாரியான குரூப் கெப்டன் லன்கா கொடிப்பிலி அவர்கள் உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் பயிற்சியில் சிறந்த விமானபடையினருக்கான விருதுகளை வழங்கிவைத்தனர்.

மேலும் பிரதம விருந்தினருக்கு விமானபடையினரால் விசேட அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். அணிவகுப்பு படைத்தலைவராக விங் கமான்டர் அனுர விஜேசிரிவர்தன அவர்களும், அணிவகுப்பு உதவி அதிகாரியாக ப்லைன் ஒபிசர் ஆர்.சி.என் ரெனெத்தி அவகளும், அணிவகுப்பு ஆணை அதிகாரியாக ப்லைட் சார்ஜண் கன்டம்பி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.





airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை