குழந்தைகளுக்கான சிறப்பு கலைவிழா நிகழ்ச்சி கொண்டாட்டம்
2:34pm on Thursday 23rd December 2010
இலங்கை விமானபடை ஏகல முகாமிளின் சிவில் மற்றும் படையினரின் குழந்தைகளுக்காக “சிறப்பு கலைவிழா நிகழ்ச்சி” முகாமில் வளாகத்தின் குழந்தைகளின் பங்களிப்பின் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது. மேலும் இவ் விழாவில் சிவில் மற்றும் பாதுகாப்புப் படையினர்களும், அவர்களின் குடும்பத்தினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

திருவாளர் எட்வட் ஜயகொடி அவர்களும், திருமதி சரிதா பிரியதர்ஷனி அவர்களும் விழாவின் பிரதம அதிதியாக கலந்துகொன்டார்கள்.

மேலும் பிரபல கலைஞர்கலான திருவாளர் ஜகத் விக்ரமசிங்க, திருமதி சஞ்ஜீவணி வீரசிங்க, திருவாளர் தயான், செல்வி லோசனா  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்ச்சியை மேலும் சிறப்புர செய்தனர். ஆரம்ப விழாவில் பிரதம அதிதிகள், முகாமில் கட்டளை அதிகாரியான குருப் கெப்டன் ஜனக அமரசிங்க ஆகியோர் இனந்து பாரம்பரிய குத்து விளக்கை ஏற்றிவைத்தனர்.

குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். விமானபடை “வான் நாய் கையாளுதல்” பிரிவின் விசேட சாகசமிக்க காட்சி நிகழ்ச்சி, “மாயாஜால” காட்சி நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள், சிறு குதிரை சவாரி, விளையாட்டு ரயில் வண்டி சவாரி, குரங்கு நடனம், வாண வேடிக்கை நிகழ்ச்சி, பாலர் பாடசாலை குழந்தைகளின் நடனம், பாடல், சங்கீதம், போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது விசேடம்சமாகும். அத்துடன் விமானபடையின் இசைக் குழுவினர் நிகழ்ச்சியை மேலும் சிறப்புர செய்தனர். 




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை