அன்டிபேட்ஜ் வோட்டர்
பெர்னான்டு அவர்கள் 1985-05-01 ஆம் திகதியன்று விமானப்படைத்தளபதியாக
பதவியேற்றார்.
மேலும் இவர் நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியில்
கல்விபயின்று பின்னர் இலங்கை விமானப்படையில் தேசிய மட்டத்தில்
இணைத்துக்கொள்ளப்பட்ட அதேநேரம் மேலதிக பயிற்ச்சிக்காக இங்கிலாந்து
சென்றார். அத்தோடு இவரது பயிற்ச்சிகளின் பின் முதலாவது கெலிகொப்டர்
விமானியாக 1958 காலப்பகுதிகளில் செயற்ப்பட்டதுடன் விமானப்பயிற்ச்சி
ஆலோசகராகவும் விளங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்தோடு இவர் இல.02
போக்குவருத்து விமானப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும்,கடுநாயக்க மற்றும்
சீனக்குடா விமானப்படைத்தளங்களின் கட்டளை அதிகாரியாகவும் ,1981
காலப்ப்குதிகளில் மன்ற அதிகாரிகளின் பிரதானியாகவும் செயற்ப்பட்ட அதேநேரம்
இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாட்டு பாதுகாப்பு கல்லூரிகளில்
பட்டப்படிப்பினையும் முடித்துக்கொண்டார். மேலும் இவர் "விஷிஸ்ட சேவா
விபுஷெனய" விருதினை பெற்றுள்ளதுடன் ,1990- 06- 31 ஆம் திகதியன்று
ஓய்வுபெற்று ,பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் கடமை புரிந்தமை விஷேட
அம்சமாகும்.