டிக் கெர்த்பேர்ட் பெரேரா அவர்கள் தேசிய மட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட கெடெட் அதிகாரிகளுல் ஒருவர் என்பதுடன் 1980-05-02ஆம் திகதியன்று 6ஆவது விமானப்படைத்தளபதியாக றோயல் சிலோன் விமானப்படையில் இணைந்துகொண்டார்.
இவர் தனது கல்வியனை கொழும்பு புனித பெனடிக் கல்லூரியில் கற்றுக்கொண்டு 1951- 09- 21ஆம் திகதியன்று விமானப்படையில் இணைந்துகொண்ட அதேநேரம் தனது பயிற்ச்சிகளை முடித்துக்கொண்டு அப்போதைய பிரதமராக இருந்த கொளரவ டி.எஸ். சேனாநாயக்க அவர்களால் விமானிக்கான சின்னத்தினை பெற்றுக்கொண்டார். இவர் கூடுதலாக கடுநாயக்க விமானப்படையில் தனது சேவைக்காலத்தினை கழித்ததுடன் பின்னர் இல.02 விமானப்போக்குவருத்துப்பிரிவின் கட்டளை அதிகாரியாக 1964- 1968 காலப்பகுதிகளில் செயற்ப்பட்ட அதேநேரம் ,கடுநாயக்க விமானப்படை முகாமின் நிர்வாக கட்டளை அதிகாரியாகவும் செயற்ப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்தோடு இவர் விமானப்படைத்தலைமையகத்தில் நிர்வாக பணிப்பாளராகவும் ,விமான தொழிற்பாட்டு பணிப்பாளராகவும்,மன்றங்களின் பிரதான அதிகாரியாகவும் செயற்ப்பட்டதோடு ஒர் விமானி முதலாவதாக நிர்வாக பணிப்பாளராக செயற்ப்பட்டதும் அதுவாக அமைந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்தோடு இவரது காலத்தில் பெல்.212,பெல்412 போன்ற விமானங்களை கூடுதலாக கொள்வனவுசெய்த அதேநேரம் இவர் அமெரிக்காவின் விமான கட்டளைகல் மற்றும் மன்ற கல்லூரியிலும் ,இந்தியாவின் விமான பாதுகாப்பு கல்லூரியிலும் பட்டம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இருதியாக இவர் 1985- 04- 30 ஆம் திகதியன்று பதவியில் இருந்து விஷிஸ்ட சேவா விபூஷனய விருதுடன் ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.