"எயார் சீப் மார்ஷல்" ஜயலத் வீரக்கொடி அவர்கள் 1998-
03- 06 ஆம் திகதியன்று இலங்கை விமானப்படையின் 10 ஆவது தளபதியாக
பதவியேற்றார், மேலும் இவர் அம்பலங்கொடை தர்மாஷோக கல்லூரியின் ஆதிமாணவன்
என்பதுடன் 1972 - 01 - 12 ஆம் திகதியன்று இலங்கை விமானப்படையில் ஓர்
விமானியாக இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இவர் இல.04 விமானப்பிரிவு,இல.02 விமானப்பிரிவு
போன்றவற்றின் கட்டளை அதிகாரியாகவும், சிரேஷ்ட விமான மன்ற
அதிகாரியாகவும்,அநுராதபுரம் விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரியாகவும் ,வட
மாகாண வலய கட்டளை தளபதியாகவும்,விமான தொழிற்ப்பாட்டு பணிப்பாளராகவும்
,விமானிப்பயிற்ச்சி ஆலோசகராகவும் இறுதியாக மன்ற அதிகாரிகளின்
பிரதானியாகவும் செயற்ப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இவர் இந்தியாவில் கனிஷ்ட அதிகாரிகளுக்கான
பயிற்ச்சிநெறி, அமெரிக்காவில் விமான கட்டளைகள் மற்றும் மன்ற பயிற்ச்சிநெறி
எனபனவற்றை நிறைவுசெய்துள்ளதுடன், விமானப்படையின் அபிவிருத்திக்காகவும்
அதாவது நீச்சல்.விவாக விடுதிகளை அமைத்தல், தசைவிருத்தி பயிற்ச்சி
நிலையங்கள் என்பனவாகும். அத்தோடு இவர் மிக்.27, கெ- 8, பிடி- 06 போன்ற
விமானங்களுக்கு முக்கியத்துவம் வழங்கியதுடன் ,ரன விக்ரம பதக்கம் , விஷிஸ்ட
சேவா விபூஷனய,உத்தம சேவா பதக்கம் போன்ற விருதுகளையும் வென்றுள்ள அதேநேரம்
இவர் 2002- 07- 15 ஆம் திகதியன்று பதவியில் இருந்து ஓய்வுபெற்றமை
குறிப்பிடத்தக்க விடயமாகும்..