1990- 08- 01 ஆம் திகதியன்று மாகலவத்தகே
ஜொனி டெரன்ஸ் டி சில்வா குணவர்தன அவர்கள் இலங்கை விமானப்படையின் 08 ஆவது
விமானப்படைத்தளபதியாக பதவியேற்றார்.
இவர் கொழும்பு வெஸ்லி கல்லூரியில் கல்வி பயின்றதுடன்
1959- 12 - 31 ஆம் திகதியன்று இலங்கை விமானப்படையில்
இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்தோடு இவர் பல
விமானப்பிரிவுகளிலும் கடமையாற்றியுள்ளதுடன் விஷேடமாக மிக் 17 ஜெட்
விமானங்களில் கூடுதலாக கடமையாற்றியுள்ள அதேநேரம் இங்கிலாந்து மற்றும்
இந்தியா போன்ற நாடுகளில் பாதுகாப்பு தொடர்பான பட்டப்படிப்பினையும்
பெற்றுள்ளார்.
மேலும் இவர் இல.02
போக்குவருத்து விமானப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும் , சீனக்குடா
விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரியாகவும், 1986 காலப்பகுதிகளில் பிரதான
மன்ற அதிகாரியாகவும் செயற்ப்பட்ட அதேநேரம் இவரது காலத்தில் அதிவேக யுத்த
விமானங்கள்,எப்.7 விமானங்கள், எம்.ஐ.17 கெலிகொப்டர்கள் போன்றன தொடர்பாக
அதிகமாக கவன்ம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்தோடு இவர்
"விஷிஸ்ட சேவா விபூஷனய " விருதுடன் 1994- 02- 16 ஆம் திகதியன்று
தனது பதவியில் இருந்து ஓய்வுபெற்றார்.